சமரச தீர்வு நாள் விழா

சமரச தீர்வு நாள் விழா

Update: 2022-04-09 18:22 GMT
்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் சமரச தீர்வு நாள் விழா நேற்று தொடங்கியது. திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி வரவேற்றார். திருப்பூர் மாவட்ட சமரச மையத்தின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் பேசும்போது, ‘நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்தாலும் சமரச தீர்வு மையத்தின் மூலமாகவும் சுமூக தீர்வு காணலாம். இதை வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், போலீஸ் துணை கமிஷனர்கள் அபினவ்குமார், ரவி, திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பாலகுமார், அட்வகேட் அசோசியேசன் தலைவர் சிவப்பிரகாசம், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி பிரஷ்னேவ் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து சமரச தீர்வு மையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இருந்து தொடங்கியது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர்கள், கோர்ட்டு பணியாளர்கள், மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்