தர்மபுரியில் பெண்ணிடம் நகை பறிப்பு

தர்மபுரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர்.

Update: 2022-04-09 16:51 GMT
தர்மபுரி:
தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் வசந்தா (வயது 58). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் அவருடைய கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்