மறையூர் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
மறையூர் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
கலவை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் கலவை தாலுகாவில் உள்ள மழையூர் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் கலவை தாசில்தார் ஷமீம் தலைமையில் நடைபெற்றது. மழையூர் ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா பிழைத்திருத்தம் தொடர்பான அனைத்து மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் கலந்து கொண்டு பிழைதிருத்தம் செய்யப்பட்டதற்கான சான்றுகளை சம்பந்தப்பட்ட பயனாளிக்கு வழங்கினார். துணை தாசில்தார் சத்தியா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், ஒன்றியக் குழு உறுப்பினர் திலகவதி செங்குட்டுவன், மழையூர் ராமமூர்த்தி கிராம நிர்வாக அதிகாரிகள் ஷோபனா ராசன், சீனிவாசன் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.