திருவெண்காடு, பூம்புகார் பகுதிகளில் சாரல் மழை

திருவெண்காடு, பூகம்புகார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின் தடையால் 6 மணி நேரம் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-04-09 16:39 GMT
திருவெண்காடு:
திருவெண்காடு, பூகம்புகார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின் தடையால் 6 மணி நேரம் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சாரல் மழை
மயிலாடுதுறை மாவட்டம்  திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்ெடரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சாரல் மழை பெய்தது. அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் பூம்புகார் மற்றும் திருவெண்காடு பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. குறிப்பாக தூரல் மழை பெய்தால் கூட உடனடியாக மின் தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. 
மின்தடை
மின்கம்பிகள் செல்லும் வழியில் அதிக அளவில் மரங்கள் உள்ளதாக தெரிகிறது. மேலும் பழுதடைந்த கம்பிகள் இருப்பதால், அடிக்கடி அறுந்து விழுந்து விடுகிறது. இதன் காரணமாக மின் தடை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 
எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்
----

மேலும் செய்திகள்