வீடு புகுந்து பெண் பலாத்காரம்

வீடு புகுந்து பெண் பலாத்காரம் செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் புகார் தொிவிக்கப்பட்டது.

Update: 2022-04-09 15:52 GMT
விழுப்புரம், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 30-ந் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானஜோதி என்பவர், அந்த பெண்ணின் பாட்டி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் உனது பாட்டி, தாத்தாவை கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
இதுபற்றி பெண்ணின் சித்தி, புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இன்னும் அவரை போலீசார் கைது செய்யவில்லை. எனவே ஞானஜோதி மீது தக்க நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று நேற்று பெண்ணின் உறவினர்கள், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற போலீஸ் அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்