திண்டிவனம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு
திண்டிவனம் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிமன்றத்துக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பூர்ணிமா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோர்ட்டு ஆவணங்களை சரி பார்த்தார். பின்னர் சமரச தீர்வின் பயன்கள் குறித்த பிரசுரத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினரும், திண்டிவனம் மூத்த வக்கீலுமான கோதண்டத்திடம் நீதிபதி பூர்ணிமா வழங்கினார். மேலும் வழக்குகள் சமரச முறையில் தீர்ப்பதற்கு அனைத்து நீதிபதிகளும், அனைத்து வக்கீல்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள், திண்டிவனம் பார் அசோசியேஷன் தலைவர் நாராயணன், செயலாளர் ராம் மனோகர், அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் மகேந்திரன், வழக்கறிஞர் நல சங்க செயலாளர் கிருபாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.