வால்பாறையில் சந்தனமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
வால்பாறையில் சந்தனமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் மற்றும் சந்தன கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வந்து தீர்த்த அபிஷேகம், சக்தி அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தீபாராதனை, கணபதி ஹோமம் நடத்தப்பட்டு முளைப்பாரி எடுத்து, பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக ஏராளான பெண்கள் சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்டு வால்பாறையின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதிஉலா நடைபெற்றது.