சிங்காரப்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கிய வன ஊழியர் கைது

சிங்காரப்பேட்டை அருகே தொழிலாளியை தாக்கிய வன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-09 14:46 GMT
ஊத்தங்கரை:
சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (வயது 51). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (41). வன ஊழியர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இந்தநிலையில் வன ஊழியர் ரமேஷ், தர்மனின் மோட்டார் சைக்கிளை 2 நாட்களுக்கு முன்பு வாங்கி சென்றார். ஆனால் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து தர்மன் கேட்டார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தர்மனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தர்மன் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வன ஊழியர் ரமேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்