புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்கு
தெற்கு ஆத்தூரில் புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஏரல் அருகே உள்ள கொற்கை மணலூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 39). இவர் தெற்கு ஆத்தூர் மெயின் பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிைடத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் கடைக்குச் சென்று சோதனை நடத்தினார். இதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றது தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது கடையில் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.