ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்திவந்த வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்திவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-09 12:56 GMT
 குடியாத்தம்

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் நேற்று மதியம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், ஏட்டுகள் லட்சுமி, மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

ஒருவரின் பையில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் குடியாத்தம் செதுக்கரை ஜீவாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் தினகரன் (வயது 20) என்பதும், குடியாத்தம் நகரில் விற்பனை செய்ய கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்