வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2¼ லட்சம் மோசடி

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-04-09 05:20 GMT
சேலம்:-
சேலம் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 44). சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசியவர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களது ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது. அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் வேண்டும் என்றும் அந்த விவரங்களை செல்போனில் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர், வங்கி கணக்கு விவரங்களை கூறியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2¼ லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அப்போது பணம் மோசடி செய்யப்பட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புருஷோத்தமன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்