பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-09 05:19 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரமோற்சவ விழா

பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. 

இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி  கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவீதி உலா

பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரம் பல்லக்கில் வீற்றிருந்தார். 

பின்னர் காலை 10 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு வெங்கடாஜலபதி அலங்காரத்திலும், மாலை 6 மணிக்கு ஆண்டாள் அலங்காரத்திலும், ஞாயிற்றுக்கிழமை காலை ரெங்கநாயகி தாயர் அலங்காரத்திலும், மாலையில் ராமர் அலங்காரத்திலும் பெருமாள் திருவீதி உலா வருகிறார். 

தேர்வடம் பிடித்தல்

இதேபோன்று வருகிற 15-ந் தேதி தினமும் காலை, மாலை வெவ்வேறு அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.    16-ந் தேதி காலை 10.30 மணிக்கு தேர் வடம்பிடித்தல், மாலை 6 மணிக்கு திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. 

17-ந் தேதி காலை 6 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றியுடன் விழா நிறைவுபெறுகிறது.

மேலும் செய்திகள்