ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-04-08 22:50 GMT
திருச்சி:
திருச்சி கே.கே.நகரை அடுத்த ஓலையூர் ரிங்ரோடு பாரிநகர் பகுதியில் நேற்று பகல் ஆட்டோ ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை சுரேஷ் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார். ஆட்டோவில் இஸ்மாயில் (48), சரவணன் (45), காமராஜ் (48) உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். சாலையோரம் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காமராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் ஓடிச்சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்