சொத்து வரி உயர்வுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வுக்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-08 22:39 GMT
திருச்சி:
சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, நேற்று திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்திவிட்டு மத்திய பாரதீய ஜனதா அரசு மீது பழியை சுமத்தி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது. சொத்து வரியை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரியை கைவிடுமாறு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்