சமரச தின விழிப்புணர்வு பிரசார வாகனம்

நெல்லையில் சமரச தின விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-08 22:12 GMT
நெல்லை:
சமரச மையம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று சமரச தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு பஸ்களில் சமரச மைய விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, அரசு பஸ்களில் சமரச மையத்தின் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, குடும்ப நல நீதிபதி குமரேசன், மகிளா நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, வக்கீல் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மாரியப்ப காந்தி மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுமக்கள் சமரச மையம் மூலம் வழக்குகளை விரைவாக சமரசமாக முடிப்பது பற்றிய விழிப்புணர்வு முகாம் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் நடக்கிறது. மேலும் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை மாவட்ட சமரச மையத்தில் சிறப்பு அமர்வுகள் மூலம் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்பட உள்ளன.

மேலும் செய்திகள்