இரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்மஆசாமி நடமாட்டம்
நித்திரவிளை பகுதியில் இரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமியின் நடமாட்டத்திால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே பூந்தோப்பு காலனி உள்ளது. இந்த பகுதியில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் மேலாடை இல்லாமல் துணியால் முகத்தை மூடி கொண்டு வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளான். இது அங்கு ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வருகிற நாட்களில் துக்க வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை வருதல் இரவு நேரங்களில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் இல்லாமல் மூடியே கிடக்கும். இதனால், மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்து திருடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே,திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.