முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

போடிநாயக்கன்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-04-08 20:25 GMT
வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் சந்தை வாசலில் முத்தாலம்மன், பகவதி அம்மன், காளியம்மன் அலங்காரம் செய்து கரகத்துடன் புறப்பட்டு போடிநாயக்கன்பட்டி மந்தை திடலில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தை சென்றடைந்தது. 2-ம் நாள் காலை அங்கு பொங்கல் வைத்து தீச்சட்டி எடுக்கப்பட்டது. அன்று மாலை பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின் பூஞ்சோலையை அடைந்தது. 3-ம் நாள் நேற்று காலை முத்தாலம்மன், காளியம்மன் சிலைகள் முளைப்பாரியுடன் புறப்பட்டு மெயின் ரோட்டில் ஊர்வலமாக வந்து வருவாய் ஆய்வாளர் அலுவலக பின்புறமுள்ள தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் முத்தாலம்மன் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள பூஞ்சோலையை சென்றடைந்தது.

மேலும் செய்திகள்