போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு முதலுதவி பெட்டி

சங்ககிரியில் போலீஸ் ரோந்து வாகனங்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது.

Update: 2022-04-08 20:11 GMT
சங்ககிரி:-
சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் 2 போலீஸ் போக்குவரத்து ரோந்து வாகனங்களுக்கு சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 2 முதலுதவி பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு சங்ககிரி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். சங்ககிரி ரோட்டரி சங்க தலைவர் ஹெலினாகிருஷ்டோபர் கலந்துகொண்டு முதலுதவி சிகிச்சை பெட்டியை வழங்கினார். இதில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் திவாகர், வெங்கடாசலம், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார்  கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்