சேலம் வழியாக செகந்திராபாத் -எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
செகந்திராபாத்- எர்ணாகுளம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
சூரமங்கலம்:-
கோடை காலத்தில் ரெயில்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது, அதன்படி செகந்திராபாத்-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07189) செகந்திராபாத் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமைதோறும் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு நல்கொண்டா, மிரியாலகுடா, பிடுகுரல்லா, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சனிக்கிழமை மதியம் 12.47 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக இரவு 8.15 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் வருகிற ஜூன் மாதம் 24-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் எர்ணாகுளம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07190) எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை தோறும் இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர் வழியாக செகந்திராபாத் ரெயில் நிலையத்திற்கு இரவு 11.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.