கரூரில் கொரோனாவுக்கு ஒருவர் சிகிச்சை
கரூரில் கொரோனாவுக்கு ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கரூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தனர். நேற்று முன்தினம் 2 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்தார். தற்போது ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.