நாமக்கல்லில் போட்டோ, வீடியோகிராபி பயிற்சி

நாமக்கல்லில் போட்டோ, வீடியோகிராபி பயிற்சி நடக்கிறது.

Update: 2022-04-08 18:28 GMT
நாமக்கல்:
இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி நாமக்கல்லில் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வருகிற 12-ந் தேதி தொடங்கி 30 நாட்கள் நடக்கிறது. 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, சான்றிதழ், பொருட்கள் மற்றும் தேனீர், சிற்றுண்டி, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) நாமக்கல்லில் திருச்சி மெயின் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அருகே ரவின்பிளாசாவில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நேரில் வந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தலின் பேரில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்