அறந்தாங்கியில் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-04-08 18:10 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கி எல்.என்.புரத்தில் உள்ள செல்வவினாயகர் கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்த கோவிலின் அறங்காவலர்கள் அம்மையப்பன், கண்ணன் ஆகியோர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த மனு மீதான வழக்கு விசாரணை செய்த நீதிமன்றம் கோவில் அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம், இந்து அறநிலையத்துறை இணைந்து அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அந்த பகுதியில் இன்று பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது எதிப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்