மாரண்டஅள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை
மாரண்டஅள்ளி அருகே கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த செங்கண் பசுவன்தலாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னன்னன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பார்வதி கோபித்து கொண்டு சேலத்தில் உள்ள பெறறோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சின்னன்னன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.