வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும்
மாணவ-மாணவிகள் இடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
சிவகங்கை,
மாணவ-மாணவிகள் இடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
வாசிப்பு திறன்
பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டும், வாசிப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 15-ந் ்தேதி முதல் 11 நாட்களுக்கு புத்தக திருவிழா சிவகங்கையில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத்திருவிழாவில் மாணவ, மாணவிகளை பங்கு பெறச்செய்வது தொடர்பாக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மருதுபாண்டியர் மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. முதன்மைகல்வி அதிகாரி மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 26-ந் தேதிவரை 11 நாட்கள் புத்தக்கத்திருவிழா நடைபெற உள்ளது.
இந்த புத்தகத்திருவிழாவில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், 110 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 100 அரங்குகளில், அனைத்து வகையான புத்தகங்களும் இடம் பெற உள்ளன. மீதம் உள்ள 10 அரங்குகளில் அரசு துறை திட்டங்கள் இடம்பெறும். இந்த கண்காட்சியில், மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இதில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகவும், அவர் களது வாசிப்புத்திறனை ஊக்குப்படுத்துவதற்கு என அடிப் படையாகவும் இந்த புத்தகத்திருவிழா அமையும். மேலும், அனைத்து வகையான புத்தகங்களை ஒரே இடத்தில் பெறு வதற்கும் உதவியாக புத்தகத்திருவிழா அமையும். புத்தகத்திருவிழாவில் நடைபெறுகிற பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகளை கலந்துகொள்ள செய்து, அவர்களது உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
எனவே, 69 உயர் நிலைப்பள்ளிகள், 68 மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த மொத்தம் 137 தலைமை ஆசிரியர்கள் இதில் தனிகவனம் செலுத்தி, காலஅட்டவணையினை திட்டமிட்டு, அதன்படி கலந்து கொள்ள செய்து அவர்களின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி (சிவகங்கை), சண்முகநாதன் (தேவகோட்டை), பங்கஜம் (திருப்பத்தூர்) மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிகள் கலந்துகொண்டனர்.