குருவராஜபேட்டையில் ரேஷன் கடை ஊழியர் பாம்பு கடித்து பலி

குருவராஜபேட்டையில் ரேஷன் கடை ஊழியர் பாம்பு கடித்து பலியானார்.

Update: 2022-04-08 17:16 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகன் குமரேசன் (வயது 28). இவர் குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.  இரவு 10 மணி வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது குமரேசனின் அலரல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது குமரேசனை பாம்பு கடித்து இருப்பது தெரியவந்தது. 

உடனே அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் குமரேசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்