செலவினம் மேற்கொள்ள ஊராட்சிக்கு தடை

செலவினம் மேற்கொள்ள ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2022-04-08 17:12 GMT
கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரும், ஊராட்சிகளின் ஆய்வாளருமான லலிதா கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர், கொள்ளிடம் பகுதி வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஒரு தடை ஆணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 ஊராட்சி நிர்வாகத்தால், ஊராட்சி நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், ஊராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலரின்(கிராம ஊராட்சி) அறிக்கையிலும், உதவி இயக்குனரின் (ஊராட்சிகள்) ஆய்வு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஊராட்சி நிதியிலிருந்து வரவு-செலவுகளை மேற்கொள்ள ஊராட்சி தலைவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.ஆகவே, ஊராட்சியில் மேலும் நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203-ன் படி தற்போது ஊராட்சியின் பல்வேறு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் வரவு-செலவினங்கள் அனைத்தும் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் நேரடியாக மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இனி ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான செலவினங்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவரும் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்