ஆம்பூர் அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலி
ஆம்பூர் அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலியானார்.
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது நண்பர் முருகேசன் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தை வெட்டுவதற்கு குப்பனை உதவிக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் தென்னை மரத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தென்னைமரம் குப்பன் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.