மில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

மில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-04-08 16:33 GMT
காங்கயம், 
காங்கேயம் அருகே, பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்ததில் ரூ.2 லட்சம் நஷ்டம் அடைந்ததால் மில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ரூ.2 லட்சம் நஷ்டம்
ஈரோடு மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் மைதிலி, இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 26). தற்போது இவர்கள் காங்கயத்தை அடுத்துள்ள நெய்க்காரன்பாளையத்தில் தங்கி இருந்தனர். விக்னேஸ்வரன் காங்கயம் பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. 
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்ததாக தெரிகிறது. அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் விக்னேஸ்வரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 
வீட்டுக்கு வந்து பார்த்த மைதிலி தனது மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்