காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கீழையூரில் போலீசார் சார்பில் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேளாங்கண்ணி:
கீழையூர் போலீசார் சார்பில் கீழையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கீழையூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேதமூர்த்தி கலந்துகொண்டு பொதுமக்களுக்காக போலீசார் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை பதவி இறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதால், இந்த செயலில் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண் குழந்தைகள் செல்போனில் அதிகநேரம் பேசுவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்றார். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராசு, ஊராட்சிமன்ற தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ், துணைத்தலைவர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.