பெங்களூரு கரகத்தை தர்காவுக்கு எடுத்து வர தீர்மானம்: ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. வரவேற்பு
பெங்களூரு கரகத்தை தர்காவுக்கு எடுத்து வரப்படும் என்ற விழா குழுவின் முடிவுக்கு ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க பெங்களூரு கரக திருவிழா வழக்கம் போல் நடைபெறும் என்று குழு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். சமுதாயத்தில் சில விஷமிகள் பிரித்தாளும் கொள்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதை பெங்களூரு கரக விழா குழுவினர் மதிக்காமல் நல்லிணக்கத்தை பேணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்து அமைப்புகள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் கரக விழா குழுவினர், முந்தைய வழிமுறைகளையே பின்பற்றுவதாக கூறி இந்த மண்ணின் நல்லிணக்கத்தை தூக்கி பிடித்துள்ளனர்.
பெங்களூரு கரகத்தின்போது கரகத்தை தர்காவுக்கு எடுத்து வருவது வழக்கம். ஆனால் கரகத்தை தர்காவுக்கு எடுத்து செல்ல கூடாது என்று சில இந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை விழா குழு நிராகரித்து இருப்பதை பாராட்டுகிறேன்.
இவ்வாறு ஜமீர்அகமதுகான் குறிப்பிட்டுள்ளார்.