அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-08 14:52 GMT
நாகர்கோவில், 
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு இறுதி உடன்பாட்டை உடனே நடைமுறை படுத்த வேண்டும். ரப்பர் தொழிலாளர்களை இடமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் வல்ச குமார் தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாவட்ட துணைச் செயலாளர் நடராஜன் மற்றும் ஐ.என்.டி.யு.சி. உதவி செயலாளர் ஸ்ரீகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க மாநகரச் செயலாளர் சுந்துரு, ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமால் மற்றும் ஏ.டி.பி. மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்