வாழை கன்றுகளை நட்டு சாலை பணியாளர்கள் போராட்டம்
வாழை கன்றுகளை நட்டு சாலை பணியாளர்கள் போராட்டம்
ஊட்டி
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஊட்டியில் உள்ள நீலகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பணி நீக்க காலம் மற்றும் பனிக்காலத்தில் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வாழை கன்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள், சாலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.