சிலுவை பாதை ஊர்வலம்

சிலுவை பாதை ஊர்வலம்

Update: 2022-04-08 14:51 GMT
குன்னூர்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதனை ஆண்டுதோறும் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலுவை பாதை ஊர்வலம் நடத்தப்படுகிறது. 

இந்த நிலையில் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள புனித செபாஸ்தியர் ஆலயம் சார்பில் சிலுவை பாதை ஊர்வலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7.45 மணிக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் வேளாங்கண்ணி கெபியில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புனித செபாஸ்தியர் ஆலய பங்கு தந்தை மார்டின் புதுச்சேரி, திருப்பலியை நடத்தி சிலுவை பாதை ஊர்வலத்தை தொடங்சி வைத்தார். ஆலய அறங்காவலர்கள் அந்தோணி, டோமி, தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது பர்லியாரில் இருந்து கே.என்.ஆர்.நகர், மரப்பாலம், டபுள் ரோடு, காட்டேரி, காந்திபுரம், பஸ் நிலையம், மவுண்ட் ரோடு வழியாக கொளுத்தும் வெயிலில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்து மாலை 3 மணிக்கு ஆலயத்தை அடைந்தது. பின்னர் அங்கு திருப்பலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வில்பிரட், சதிஷ் உள்பட பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்