திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை பகுதியில் திருட்டுத்தனமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, திருவள்ளூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ஆர்.கே.பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, போலீசார் 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தியதாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பூச்சாலியூர் மாங்காளிபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 55) என்பவரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.