வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-04-08 14:40 GMT
திருவாரூர்:
பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது. 
பாலியல் தொல்லை 
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சரண்ராஜ்(வயது 25). கடந்த 2021-ம் ஆண்டு இவர், பத்தாம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை கைது செய்தனர்.
27 ஆண்டுகள் சிறை 
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முடிவடைந்தது. மகிளா கோர்ட்டு  நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பு அளித்தார். 
அதில் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சரண்ராஜூக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
---

மேலும் செய்திகள்