துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
உத்திரமேரூரில் திரௌபதை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்திரமேரூரில் திரௌபதை அம்மன் கோவிலில், அக்னி வசந்த விழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, தினமும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை துரியோதனை படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக பிரம்மாண்டாமான துரியோதனன் போன்ற மண்ணிலான உருவம் அமைக்கப்பட்டது. இதில் பீமன் வேடமிட்டவர் துரியோதனனின் உருவம் மீது அடிக்க துரியோதணன் இறந்த காட்சியினை நாடக குழுவினர் சிறப்பாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் அளிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.