எட்டயபுரத்தில் தொழிலாளி தெப்பகுளத்தில் முழ்கி பலி
எட்டயபுரத்தில் குளிக்க சென்ற தொழிலாளி தெப்பக்குளத்தில் மூழ்கி பலியானார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் புலிமால் தெருவை சேர்ந்த ராஜ் என்பவரது மகன் கணேசன் (வயது 34). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரிய தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தெப்பகுளத்தில் சென்று பார்த்தனர். அப்போது தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்