நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பரவத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் தலைமை தாங்கினார். பரவத்தூர் ஊரட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், வெங்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத் தலைவர் அசோகன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் நாகராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினரகள் செங்கல்நத்தம் பிச்சாண்டி, பெருமாள், மதன்குமார், ஊராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.