கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலிச்சங்கிலி திருட்டு
கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே செல்லத்தமிழ் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் அர்ச்சகர் வைத்தியநாதன்(வயது 64), பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை அவர் மீண்டும் கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு் அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் வைத்தியநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.