கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்,
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜான்சிராணி மற்றும் உறவினர் மணிகண்ட சதீஷ். இவர்கள் 3 பேரும் கடந்த 2014-ம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ரூ.72 லட்சத்து 67 ஆயிரம் வரை மோசடி செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த 3 பேரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிபதி ரவி, 3 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.