தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
விருதுநகரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் ரோமன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 60). இவரது பேரன் காளிதாஸ் (19). ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு பெற்றோர் யாரும் இல்லாத நிலையில் தனது பாட்டி மாரீஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான காளிதாஸ் சம்பவத்தன்று பாட்டி மாரீஸ்வரி கண்டித்ததால் வீட்டின் உள்அறையை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.