மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
ராஜபாளையம் புதுப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் புதுப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 8 சமுதாயத்தினர் இணைந்து திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெசவாளர்களால் திரிக்கப்பட்ட கொடிக் கயிறு, பெட்டி பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடி மரத்தில், கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 16-ந் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரவிராஜா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.