நன்னடத்தை பிணைைய மீறிய வாலிபர் சிறையில் அடைப்பு
நெல்லை அருகே நன்னடத்தை பிணைைய மீறிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை:
சேரன்மாதேவி கீழநாலாந்தெருவைச் சேர்ந்த வேலப்பன் மகன் மாயாண்டி (வயது 25). இவர் மீது சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் மாயாண்டியிடம் நிர்வாக நடுவரால், 1 வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. இதற்கிடையே கடந்த 1-ந்தேதி சேரன்மாதேவி, பாரதியார் நகரை சேர்ந்த நபரை ஆயுதத்தை காட்டி மிரட்டிய வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகதேவி, சேரன்மாதேவி இரண்டாம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக மாயாண்டியை 10 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.