சீதபற்பநல்லூர் பகுதியில் இன்று மின்தடை

சீதபற்பநல்லூர் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-04-07 21:32 GMT
நெல்லை:
சீதபற்பநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன் குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழ கரும்புளியூத்து ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்