கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.49½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.49½லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
ஈரோடு
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.49½லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
கொடுமுடி
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் இயங்கிவரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. 7 ஆயிரத்து 542 தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்திருந்தார்கள். இது குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ 24 ரூபாய் 30 காசுக்கும், அதிகபட்ச விலையாக கிலோ 30 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனையானது.
675 மூட்டை கொப்பரைத் தேங்காய் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 88 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்சமாக 92 ரூபாய் 59 காசுக்கும் ஏலம்போனது. இதேபோல் 2-ம் தரம் கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக 78 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்சமாக 87 ரூபாய் 99 காசுக்கும் ஏலம்போனது. கொப்பரை தேங்காய் மொத்தம் 28 லட்சத்து 35 ஆயிரத்து 275 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் 2,107 மூட்டை எள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது குறைந்த பட்ச விலையாக ஒரு கிலோ 110 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்சமாக கிலோ 136 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 20 லட்சத்து 39 ஆயிரத்து 457 ரூபாய்க்கு எள் விற்பனையானது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் 49 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி
இதேபோல் கோபியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 85 ரூபாய் 27 காசுக்கும், அதிகபட்ச விலையாக 86 ரூபாய் 57 காசுக்கும் என ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 486-க்கு ஏலம் போனது.