1½ கிலோ கஞ்சா பறிமுதல்
அருமனை அருகே 1½கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஒரு வாலிபரை கைது செய்துள்ளனர்.
அருமனை :
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடையால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையால் அருமனை அருகே உள்ள கிலாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1½ கிேலா கஞ்சாைவ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முகமது அப்சர்(வயது 30) என்பதும், கேரள மாநிலம் வெள்ளறடை அருகே செம்பூர் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைடுத்து போலீசார் கஞ்சாைவ பறிமுதல் செய்து முகமது அப்சரை கைது செய்தனர்.