கஞ்சா விற்ற பெண் உள்பட 11 பேர் கைது

சேலம் மாநகரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-07 20:18 GMT
\\சேலம்:-
சேலம் அழகாபுரம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெரியபுதூரில் கஞ்சா விற்பனை செய்த பெரியதாயி (வயது 55) என்ற பெண்ணை கைது செய்தனர். அதேபோன்று அம்மாபேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் (30), அப்துல்ரகுமான் (25), தமிழ்மணி, (22), மோகனவேல் (30), பிரகாஷ் (48) உள்பட 11 பேரை கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்