வெயில் காரணமாக தோட்டத்தில் தீ; மரங்கள் எரிந்து நாசம்

வெயில் காரணமாக தோட்டத்தில் தீ பற்றியது. இதில், ஏராளமான மரங்கள் எரிந்து நாசமடைந்தன.

Update: 2022-04-07 19:02 GMT
நொய்யல், 
புன்னம் சத்திரம் அருகே கொட்டகை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 45), விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. தற்போது விவசாயம் செய்யாததால் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. வெயில் காரணமாக காய்ந்திருந்த செடி, கொடிகளில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. பின்னர் அங்கிருந்த மரங்களிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தீ பரவாமல் தடுத்தனர். இருப்பினும் தீவிபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்