அம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு
அம்மன் கோவிலில் உண்டியல் திருடப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் மெயின்ரோடு அருகே ஸ்ரீ பட்டன காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கிராம மக்கள் கண்டனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருடு போன உண்டியலில் சுமார் ரூ.50 ஆயிரம் அளவுக்கு இருக்கக்கூடும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடு சென்றது குறிப்பிடத்தக்கது.