வாலாஜா அருகே நகை திருடிய வாலிபர் கைது

வாலாஜா அருகே நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-07 18:27 GMT
வாலாஜா
 
வாலாஜாவை அடுத்த ஒழுகூர் கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55). கட்டிட மேஸ்திரி. இவர் வாலாஜாபேட்டையில் கடந்த மாதம் நடந்த தேர்திருவிழாவை காண வாலாஜாவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து இருந்தார். அன்று இரவு வாலாஜாவை அடுத்த தலங்கை நாயக்கன் பாளையத்தை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் தியாகராஜன் (24) என்பவர் குமார் வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயின், கம்மல்களை திருடிச் சென்று விட்டார்.

 இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தியாகராஜனை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்